- Home
- Sports
- Sports Cricket
- வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் வீரர்கள் வார்னிங்.. இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?
வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் வீரர்கள் வார்னிங்.. இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?
Vaibhav Suryavanshi: இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, டிரெஸ்ஸிங் ரூமில் சீனியர் வீரர்கள் சீரியஸாக வார்னிங் கொடுத்துள்ளனர். அந்த மூத்த வீரர்கள் வைபவுக்கு கொடுத்த வார்னிங் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர்களிடம் இருந்து அட்வைஸ்
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறியதால், டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த சீனியர்களின் பார்வை அவர் மீது இருந்தது. இளம் வயதில் கிடைத்த இந்த பெரிய வாய்ப்பும், புகழும் வைபவின் பாதையை மாற்றிவிடுமோ என்ற கவலை சீனியர்களுக்கு எழுந்துள்ளது. போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், இஷான் கிஷன் இந்த சீரியஸ் வார்னிங் குறித்துப் பேசினார்.
வைபவுக்கு இஷான் கிஷன் சொன்னது என்ன?
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு பேசிய இஷான் கிஷன், வைபவ் குறித்து வெளிப்படையாகப் பேசினார். 'நாங்கள் இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களுக்குள் ஒரு சிறப்புப் பிணைப்பு உள்ளது. வைபவை என் சொந்த தம்பியாகவே பார்க்கிறேன். பல வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் செய்யும் தவறுகளை அவன் செய்யக்கூடாது என்பதே என் கவலை' என்று இஷான் கிஷன் கறாராகக் கூறினார்.
வைபவ் சூர்யவன்ஷி எப்படி பேட்டிங் செய்ய வேண்டும், களத்திற்கு வெளியே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். ஆனாலும், இவ்வளவு இளம் வயதில் கிடைத்திருக்கும் இந்த புகழ், ஒரு வீரரின் கவனத்தை எளிதில் திசை திருப்பக்கூடும் என இஷான் கிஷன் எச்சரித்துள்ளார்.
டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?
வைபவைச் சுற்றி உருவாகும் சூழல் பல குழப்பங்களைக் கொண்டது. நண்பர்கள் வட்டம், திடீரென வந்த புகழ், சமூக ஊடகங்களின் ஹைப்பெல்லாம் ஒரு வீரரின் சிந்தனையைக் கெடுக்கலாம். எனவே, எந்தக் குழப்பங்களுக்கும் இடம் கொடுக்காமல், கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதே சீனியர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் கொடுத்த முக்கிய அறிவுரை.
இஷான் கிஷன் மட்டுமல்ல இவங்களும் தான்
இஷான் கிஷன் மட்டுமல்ல, அணியின் மற்ற சீனியர்களான அபிஷேக் ஷர்மா, அக்சர் படேல் ஆகியோரும் வைபவிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'சமூக ஊடகங்களில் கிடைக்கும் அதீத புகழோ அல்லது ஓரிரு போட்டிகளில் ரன் அடிக்காதபோது வரும் கடுமையான விமர்சனமோ, வைபவின் மனதை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது எங்கள் கடமை' என்று இஷான் கூறினார்.
பாடி லாங்குவேஜ் மாறக்கூடாது
போட்டியில் ரன் அடிக்க முடியவில்லை என்பதற்காகவோ, ஆன்லைனில் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதற்காகவோ வைபவ் துவண்டுவிடக் கூடாது. 'சமூக ஊடகங்களில் என்ன நடந்தாலும், அது ஒரு வீரரின் பாடி லாங்குவேஜையோ, தன்னம்பிக்கையையோ பாதிக்கக் கூடாது. களத்தில் இறங்கிவிட்டால், தனது இயல்பான பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்' என்பதே இளம் வீரருக்கு சீனியர்கள் கொடுத்த சீரியஸ் வார்னிங் என்பது குறிப்பிடத்தக்கது.

