கடலூரில் களத்திலேயே உயிரை விட்ட கபடி வீரர்.! கண்களை குளமாக்கும், பதைபதைக்க வைக்கும் காட்சி.. வைரல் வீடியோ
கடலூர் மாவட்டத்தில் கபடி விளையாடிக்கொண்டிருந்தபோது களத்திலேயே கபடி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கபடி ஒரு வீர விளையாட்டு. தமிழர்கள் காலங்காலமாக பாரம்பரியமாக ஆடிவரும் விளையாட்டு கபடி. இப்போது, கிரிக்கெட்டை போல கபடி விளையாட்டுக்கும் லீக் எல்லாம் நடத்தப்பட்டு பிரபலமாகி, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கபடி விளையாடப்படுகிறது.
ஆனால் இண்டோர் ஸ்டேடியத்தில் கபடி ஆடப்பட்டாலும், நம் மண்ணில் கபடி வீரர்கள் புழுதி பறக்க ஆடுவதில் உள்ள உற்சாகமும் மகிழ்ச்சியும் வேறெதிலும் கிடைக்காது. வீர விளையாட்டு என்றாலே உயிரிழப்புகள் நிகழ வாய்ப்புள்ளது. அந்தவகையில் களத்திலேயே வீரர்கள் உயிரிழக்க வாய்ப்புள்ள அளவிலான வீர விளையாட்டுத்தான் கபடி.
கபடி ஆடும்போது களத்திலேயே பலர் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு. அதை அடிப்படையாக கொண்டுதான், வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் கூட, களத்திலேயே கதாநாயகன் விஷ்ணு விஷால் உயிரிழக்கும் மாதிரியான காட்சி இடம்பெற்றிருக்கும்.
இதையும் படிங்க - Axar Patel Record: தோனி, யூசுஃப் பதானின் நீண்டகால சாதனையை தகர்த்த அக்ஸர் படேல்..!
அந்தமாதிரியான, பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கும் வகையிலான ஒரு உண்மை சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மணாடிகுப்பம் பகுதியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டுக்காளை என்ற பெயரிலான கபடி அணியும் களமிறங்கியுள்ளது. அந்த அணியில் ஆடியதில் விமல் என்ற திறமையான வீரரும் ஒருவர். இவர் பல போட்டிகளில் அபாரமாக விளையாடி பரிசுகளை வாங்கி குவித்திருப்பதுடன், தனது அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த கபடி தொடரில் ஒரு போட்டியில் ஆடியபோது, ரைடு சென்ற அவரை எதிரணி வீரர்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பிவிட்டார் விமல். கடைசியாக எதிரணி வீரர் ஒருவர் விமலை பிடிக்கும் முயற்சியில் அவரது கழுத்தில் மேல் கால் பட்டவாறு மேலே விழுந்தார். ஆனாலும் விமல் அவரிடமிருந்தும் தப்பிவிட்டார். கடைசியில் எழ முயன்ற விமல், எழமுடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்தார். அவரது சக வீரர்களும் மற்றவர்களும் விமலை எழுப்பினர். மூச்சு பேச்சில்லாமல் கிடந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க - நீங்க ஒருநாள் கிரிக்கெட்டில் தான் 500 விக்கெட் வீழ்த்தியிருக்கீங்க..! வாசிம் அக்ரமுக்கு சல்மான் பட் பதிலடி
கபடி வீரர் ஒருவர் களத்திலேயே உயிரைவிட்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், பார்ப்பவர்களின் கண்களை குளமாக மாற்றுகிறது அந்த வீடியோ காட்சி.