Asianet News TamilAsianet News Tamil

#TokyoOlympics மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா..! இந்தியாவிற்கு 6வது பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா.
 

indian wrestler bajrang punia win bronze in tokyo olympics
Author
Tokyo, First Published Aug 7, 2021, 4:46 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் நாளையுடன் முடிகிறது. இந்தியா 5 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், இன்றைய தினம் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, இந்தியாவிற்கு 6வது பதக்கத்தை வென்று கொடுத்தார்.

65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று நடந்தது. இதில், கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை எதிர்கொண்ட இந்தியாவின் பஜ்ரங் புனியா, அபாரமாக விளையாடி 8-0 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களை வென்றுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios