26ஆவது முறையாக உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய வீரர் பங்கஜ் அத்வானி!

IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Indian player Pankaj Advani won the World Billiards Championship for the 26th time rsk

கத்தார் நாட்டின் தோஹாவில் IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்திய வீரர்களான சவுரவ் கோத்தாரி மற்றும் பங்கஜ் அத்வானி இருவரும் மோதின. இந்தப் போட்டியில் பங்கஜ் அத்வானி வெற்றி பெற்று 26ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி, உலக பில்லியர்ட்ஸ் Long-Up வடிவ போட்டியில் 9ஆவது முறையாக பட்டம் வென்றார். அதே போன்று பாயிண்ட்ஸ் வடிவ போட்டிகளில் 8 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். இது தவிர, ஒருமுறை சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தாரர்.

லக்னோ அணிக்கு டாட்டா காட்டி விட்டு மீண்டும் கேகேஆர் அணியில் இணைந்த கவுதம் காம்பீர்!

இந்த நிலையில் தான் கத்தாரில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அரையிறுதிப் போட்டிகளில் ரூபேஷ் ஷாவை 900-273 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். இதே போன்று, துருவ் சித்வாலாவை 900-756 புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சவுரவ் கோத்தாரியை தோற்கடித்து  IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன் மூலமாக 26ஆவது முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றியோடு நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ் – வரவேற்க ரசிகர்கள் இல்லை – வைரலாகும் வீடியோ!

Indian player Pankaj Advani won the World Billiards Championship for the 26th time rsk

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios