லக்னோ அணிக்கு டாட்டா காட்டி விட்டு மீண்டும் கேகேஆர் அணியில் இணைந்த கவுதம் காம்பீர்!
இரண்டு முறை ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக கவுதம் காம்பீர் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் நடந்த 16 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் அணிகள் மட்டுமே 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை வென்றுள்ளது. மற்ற அணிகளாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை மட்டுமே டிராபியை வென்றுள்ளன.
வெற்றியோடு நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ் – வரவேற்க ரசிகர்கள் இல்லை – வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில், தான் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் வீரர்களின் ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த அணியின் வழிகாட்டியாக கடந்த 2 ஆண்டுகளாக காம்பீர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் லக்னோ அணியிலிருந்து பிரிந்து மீண்டும் தான் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார். கேகேஆர் அணியின் முதன்மை நிர்வாக அதிகாரியான வெங்கி மைசூர் காம்பீர், கேகேஆர் அணியின் வழிகாட்டியாக மீண்டும் அணியில் இணைந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷாருக்கான், இந்த முடிவை இரு கரங்களுடன் வரவேற்றார். காம்பீர் அணிக்கு வந்ததை தங்கள் கேப்டனின் திரும்புதல் என்று அழைத்தார். கேகேஆர் அணியில் இணைந்தது குறித்து கவுதம் காம்பீர் கூறியிருப்பதாவது: நான் வந்துவிட்டேன், எனக்கு பசிக்கிறது என்று குறிப்பிட்ட அவர் தான் கேகேஆர் அணியின் 23 எண் கொண்ட ஜெர்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் உடனான எனது குறைபாடற்ற பயணத்தின் முடிவை நான் அறிவிக்கையில், இந்த பயணத்தை மறக்கமுடியாததாக மாற்றிய அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள் மற்றும் ஒவ்வொரு தனிமனிதர் மீதும் நான் அன்பும் மகத்தான நன்றியுணர்வும் நிறைந்துள்ளேன்" என்று தனது பிரிந்த அறிக்கையில் காம்பீர் தெரிவித்துள்ளார்.
"இந்த குறிப்பிடத்தக்க உரிமையை உருவாக்கும் போது டாக்டர் சஞ்சீவ் கோயங்காவின் ஊக்கமளிக்கும் தலைமைக்காகவும், எனது அனைத்து முயற்சிகளுக்கும் அவர் அளித்த அளப்பரிய ஆதரவிற்காகவும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அணி எதிர்காலத்தில் அற்புதங்களைச் செய்யும் மற்றும் ஒவ்வொரு LSG ரசிகரையும் பெருமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஆல் தி வெரி பெஸ்ட் LSG பிரிகேட் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.