18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்ற இந்திய அணி, ஆசிய போட்டியில் பதக்க கணக்கை தொடங்கிவிட்டது. 

ஜகர்த்தா மற்றும் பாலேம்பங் நகரில்  45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள்  கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 40 விளையாட்டுகளில் 462 நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்தியாவில் இருந்து 572 வீரர் - வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. 36 போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா, ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பாட்மிண்டன், கபடி, தடகளம், மல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய போட்டிகளில் இந்தியா பதக்கங்கள் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மல்யுத்தம், படகுப்போட்டி, துப்பாக்கிச்சுடுதல், கபடி, ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இந்தியாவிற்கு உள்ளன. 

துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு சுற்றில் இந்தியாவின் ரவி குமார் மற்றும் அபுர்வி சண்டேலா ஆகியோர் இணைந்து 429.9 புள்ளிகளை பெற்று, வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர். 2018 ஆசிய போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது.