Hangzhou Asian Games 2023: 4 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி – கபடியில் இந்திய அணிக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி 33-29 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது.

India won gold medal in Mens Kabaddi after beating Iran by 33-29 in Asian Games at Hangzhou rsk

சீனாவில் ஹாங்சோவில் இன்று ஆண்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நடுவரின் முடிவுக்கு இரு அணிகளுமே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் 20 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

மழையால் போட்டி ரத்து – இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிப்பு – ஆண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு தங்கம்!

போட்டி முடிவதற்கு 2 நிமிடங்கள் இருந்த நிலையில், நடுவர்கள் முடிவு எடுக்க முடியாமல் தாமதமாக்கியதால், போட்டியின் முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 28-28 என்று சமநிலையில் இருந்தன. போட்டி முடிய இன்னும் ஒரு நிமிடமே இருந்த நிலையில் இந்திய அணியின் பவன் செஹ்ராவத் ரைடுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

அதன் பிறகு ரைடுக்கும் சென்றார். அப்போது, அவர் ஈரான் வீரர்கள் யாரையும் தொடாமல் எல்லை கோட்டிற்கு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பவன் ரைடு வரும் போது அமீர்ஹோசைன் பஸ்தாமி மற்றும் மூன்று ஈரானிய பாதுகாவலர்கள் பவனை வெளியே தள்ளும் முயற்சியில் அவரை நோக்கி சென்றுள்ளனர். இது போன்ற சூழலில் பவன் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆரம்பத்தில், பவனைத் தடுக்க ஈரானின் முயற்சிகளுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் முதல் தங்கம்: சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி!

இருப்பினும், வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட இந்திய அணி, கோர்ட் நடுவர் மற்றும் டிவி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. மேலும் மதிப்பாய்வு மற்றும் ஒருவேளை மற்றொரு பரிந்துரைக்குப் பிறகு, அதிகாரிகள் இந்தியாவுக்கு நான்கு புள்ளிகளை வழங்க முடிவு செய்தனர். பவனுடன் வெளியேறிய வீரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து புள்ளிகளின் எண்ணிக்கை மாறுபடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு ஈரான் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதி முடிவு பழைய மற்றும் புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்டது. பழைய விதியின்படி, இந்தியா நான்கு (அல்லது ஐந்து) புள்ளிகளைப் பெறும், அதே நேரத்தில் ஈரானிய டிஃபெண்டர்களில் ஒருவர் (பஸ்தாமி) கோட்டிற்கு வெளியே (செல்ஃப்-அவுட்) சென்றதால், புதிய விதி ஒவ்வொரு அணிக்கும் ஒரு புள்ளியைக் கொடுக்கும்.

IND vs AUS:உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

விதி 28ன் படி, எல்லைக்கு வெளியே தரையைத் தொட்ட ஒரு பாதுகாவலர் (விதி 5 இன் படி) ஒரு ரைடரைப் பிடித்தால், ரைடர் வெளியேறவில்லை என்று அறிவிக்கப்படுவார். வரம்பிற்கு வெளியே சென்ற பாதுகாவலர் அல்லது பாதுகாவலர்கள் மட்டுமே அவுட் என்று அறிவிக்கப்படுவார்கள். இந்த சூழலில் தான் மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது.

எனினும் இந்தியாவிற்கு 3 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஈரான் அணிக்கு ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து நிதின் ராவல் ஒரு புள்ளி எடுக்கவே இந்தியா 32-29 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இறுதியாக இந்திய அணி வீரர் ரைடுக்கு சென்று ஒரு புள்ளியுடன் திரும்பவே இந்தியா 33-29 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி முதல் முறையாக வெற்றி பெற்றது.

Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!

இதன் மூலமாக 4 வருட காத்திருப்பிற்கு பிறகு இந்திய கபடி அணி தங்கம் கைப்பற்றியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதின. இதில், ஈரான் தங்கம் கைப்பற்றவே இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.

BAN vs AFG: உலகக் கோப்பை 3ஆவது லீக் போட்டி: டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios