மழையால் போட்டி ரத்து – இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிப்பு – ஆண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு தங்கம்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி இறுதிப் போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சீனாவின் ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று ஆண்களுக்கான டி20 போட்டி இறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷாஹிதுல்லா கமால் நிலையான நின்று ரன்கள் சேர்த்தார். அவர் மட்டும் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி வந்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 18.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, ஷாபாஸ் அகமது மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்த நிலையில்,தான் போட்டியின் போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியானது ரத்து செய்யப்பட்ட இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தானை விட இந்தியா தரவரிசையில் முன்னிலை பெற்றதால் இது நடந்தது. தரவரிசநிலையின் அடிப்படையில், இந்தியா வெற்றி பெற்றது. தற்போது, ஐசிசி தரவரிசைப்படி, மூன்று வடிவங்களிலும் இந்தியா நம்பர் 1 அணியாக உள்ளது.
IND vs AUS:உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
துரதிர்ஷ்டவசமாக, போட்டி ரத்து செய்யப்பட்டு, இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. ஆண்டி-க்ளைமாக்ஸ் உண்மையில், இந்திய அணி விளையாடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கும். இதில், ஒரு குறையும் கூற முடியாது. வெளிப்படையாகச் சொல்வதானால், அவர்கள் போட்டியின் மூலம் சிறந்த அணியாக இருந்தனர், மேலும் அவர்கள் வெற்றிபெற தகுதியானவர்கள். ஆப்கானிஸ்தான் அணியில் சுழல் இரட்டையர்கள் சிறப்பாக பந்து வீசி வந்த நிலையில், இன்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதாக அவர்கள் உணருவார்கள்.
Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!
எனவே, இந்த விளையாட்டு மற்றும் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு 27வது தங்கம் கிடைத்துள்ளது. கிரிக்கெட்டில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளது. வங்கதேசம், இரண்டு வெண்கலப் பதக்கங்களும் வென்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை தலா ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் வெளியேறின.
BAN vs AFG: உலகக் கோப்பை 3ஆவது லீக் போட்டி: டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு!