பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் முதல் தங்கம்: சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி!
ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று பெண்களுக்கான கபடி இறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா மற்றும் சீன தைபே பெண்கள் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே இந்திய அணி புள்ளிகள் பெற்று வந்தது. இந்திய அணி வீராங்கனை பூஜா முதல் புள்ளி பெற்றுக் கொடுத்தார். அடுத்ததாக புஷ்பா புள்ளிகள் பெற இந்திய அணி 2-0 என்று முன்னிலையில் இருந்தது. இதையடுத்து சீன தைபே அணி 3 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்தது.
அதன் பிறகு இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்று வந்தன. இந்த நிலையில், ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 24-24 என்று சமநிலையில் இருந்தன. இதையடுத்து இந்திய வீராங்கனை புஷ்பா அடுத்தடுத்து 2 புள்ளிகள் பெறவே 26-25 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியது. இதன் மூலமாக ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!
இந்த நிலையில், இதையடுத்து நடந்த ஆண்களுக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடந்த பேட்மிண்டன் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் கொரிய குடியரசு நாட்டைச் சேர்ந்த சோய் சோல்கியு-கிம் வோன்ஹோ ஜோடியை 21-18, 21-16 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியுள்ளது.
இதே போன்று ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அண், ஈரான் அணியை 33-29 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியுள்ளது. மற்றொரு போட்டியில் ஆசிய விளையாட்டு ஆண்கள் T20I 2023 போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
BAN vs AFG: உலகக் கோப்பை 3ஆவது லீக் போட்டி: டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு!
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில், 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் 112 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக போட்டியானது கைவிடப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியா தங்கம் வென்றுள்ளது.
இதுவரையில் நடந்த போட்டிகளின் படி, இந்தியா 28 தங்கம், 35 வெள்ளி மற்றும் 40 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 103 பதக்கங்களுடன் தொடர்ந்து 4ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.