ஹாக்கி போட்டியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய ஆடவர் அணி. 

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் ஏற்கெனவே பாகிஸ்தான் மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டீனாவை இந்தியா வீழ்த்தியது. 

அந்த உற்சாகத்தோடு இன்று வலுவான அணியான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.  

கடந்த சாம்பியன் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பெனால்டி ஷூட் ஔட்டில் தோல்வியடைந்தது இந்தியா. 

ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்த தன்னை தயார் செய்து கொண்டுள்ளது.

நாளை பெல்ஜியத்துடனும், சனிக்கிழமை நெதர்லாந்துடனும் மோத உள்ளது இந்தியா.