பிவி சிந்து உள்பட 117 விளையாட்டு வீரர்களில் 49 விளையாட்டு வீரர்கள் பிரான்ஸ் தலைவர் பாரீஸ் வந்து சேர்ந்துள்ளனர்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் இடம் பெற்ற 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறன்றன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 69 போட்டிகளில் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர்.
இதுவரையில் ஒலிம்பிக்கில் இந்தியா 35 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உள்பட மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது. இந்த நிலையில் தான் தற்போது பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையானது 7ஐவிட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த அபிஷேக் நாயர்? இந்திய அணியில் இணைந்த கேகேஆர் துணை பயிற்சியாளர்!
பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்ற 117 விளையாட்டு வீரர்களில் வில்வித்தை (6) மற்றும் ரோவிங் (1) வீரர்கள் ஏற்கனவே பாரீஸ் சென்ற நிலையில் தற்போது அவர்களுடன் பிவி சிந்து உள்பட 49 விளையாட்டு வீரர்கள் பாரிஸ் வருகை தந்துள்ளனர். அவர்களில் ஹாக்கி அணி வீரர்கள் (19), டேபிள் டென்னிஸ் (8), துப்பாக்கி சுடுதலில் இடம் பெற்ற 21 வீர்ரகளில் 10 வீரர்கள், டென்னிஸ் (2), நீச்சல் (2), பேட்மிண்டன் (1) என்று மொத்தமாக 49 வீரர்கள் தற்போது பாரிஸ் வந்துள்ளனர்.
இலங்கை சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் – தலைமை பயிற்சியாளராக பணியை தொடங்கும் கவுதம் காம்பீர்!
