இலங்கை சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் – தலைமை பயிற்சியாளராக பணியை தொடங்கும் கவுதம் காம்பீர்!
இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் இலங்கை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. வரும் 26 ஆம் தேதி தொடங்கும் இலங்கை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். இதில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
Sastika Rajendran: யார் இந்த அழகு தேவதை? டிஎன்பிஎல் தொடரை தொகுத்து வழங்கும் சஸ்திகா ராஜேந்திரன்!
இதே போன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். ஹர்திக் பாண்டியா இருக்கும் போது ஏன் டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதே போன்று ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரையில் முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவர்கள் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடுவார்கள் என்று இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அஜித் அகர்கர் மற்றும் கவுதம் காம்பீர் இருவரும் கலந்து கொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்று இலங்கை புறப்பட்டுச் சென்றனர். காலை 11.40 மணியளவில் இலங்கை புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் மாலை 4.50 மணியளவில் இலங்கையில் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.
இதில் கவுதம் காம்பீர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், ரவி பிஷ்னோய், சுப்மன் கில், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
IND vs SL T20I Series:
ஜூலை 26: இலங்கை – இந்தியா முதல் டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 28: இலங்கை – இந்தியா 2ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 30: இலங்கை – இந்தியா 3ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஏன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்? விளக்கம் கொடுத்த அஜித் அகர்கர்!
IND vs SL ODI Series:
ஆகஸ்ட் 02: இலங்கை – இந்தியா முதல் ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 04: இலங்கை – இந்தியா 2ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 07: இலங்கை – இந்தியா 3ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு