Sastika Rajendran: யார் இந்த அழகு தேவதை? டிஎன்பிஎல் தொடரை தொகுத்து வழங்கும் சஸ்திகா ராஜேந்திரன்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரை தொகுத்து வழங்கும் சஸ்திகா ராஜேந்திரன் பற்றி பார்க்கலாம் வாங்க.
Sastika Rajendran Tamil Movies
தமிழ் திரையுலகில் அல்லது தமிழ் பொழுதுபோக்கு துறையில் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நடிகையாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் வலம் வருகிறார். கிரிக்கெட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
Sastika Rajendran Tamil Movies
சஸ்திகா ராஜேந்திரன் 4 வயதாக இருக்கும் போதே சினிமாவில் கால் பதித்துள்ளார். அவர் 1995 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மாயாபஜார் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இதே போன்று கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்துள்ளார்.
Sastika Rajendran Short Films
தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 தொடரின் 8ஆவது சீசனை சஸ்திகா ராஜேந்திரன் தொகுத்து வழங்கி வருகிறார். சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் டிஎன்பிஎல் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Sastika Rajendran TV Host
இந்த தொடரில் லைகா கோவை கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் என்று மொத்தமாக 8 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.
Sastika Rajendran Instagram
இதுவரையில் நடைபெற்ற போட்டிகளின் படி லைகா கோவை விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே போன்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 1 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து டிஎன்பிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.
Sastika Rajendran Tamil Movies
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சஸ்திகா ராஜேந்திரன் டிஎன்பிஎல் தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். இது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
Sastika Rajendran
சினிமாவில் போதுமான வாய்ப்பு கிடைக்காத போதிலும் வெப்ஸ்டோரிஸ் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.