யார் இந்த அபிஷேக் நாயர்? இந்திய அணியில் இணைந்த கேகேஆர் துணை பயிற்சியாளர்!

இந்திய அணியின் புதிய உதவி பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரின் மூலமாக அணியில் இணைந்துள்ளார்.

Do You Know who is Abhishek Nayar? Assistant Coach Join with Team India for Sri Lanka T20I and ODI Series rsk

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் கடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார். ஆனால், ஜிம்பாப்வே தொடரில் அணியுடன் இணையவில்லை. ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

இலங்கை சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் – தலைமை பயிற்சியாளராக பணியை தொடங்கும் கவுதம் காம்பீர்!

இதற்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸை கருத்தில் கொண்டு டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டர். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் இலங்கை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்று மும்பையிலிருந்து விமானம் மூலமாக இலங்கை புறப்பட்டுச் சென்றனர்.

Sastika Rajendran: யார் இந்த அழகு தேவதை? டிஎன்பிஎல் தொடரை தொகுத்து வழங்கும் சஸ்திகா ராஜேந்திரன்!

இதில், கவுதம் காம்பீர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது, முகமது சிராஜ், அக்‌ஷர் படேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். முக்கியமான அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகிய இருவரும் துணை பயிற்சியாளராக அணியில் இடம் பெற்றனர்.

யார் இந்த அபிஷேக் நாயர்?

கடந்த 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பிறந்தவர் அபிஷேக் நாயர். இந்திய அணிக்காக சிறந்த ஆல்ரவுண்டராக விளையாடியிருக்கிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

Sastika Rajendran: யார் இந்த அழகு தேவதை? டிஎன்பிஎல் தொடரை தொகுத்து வழங்கும் சஸ்திகா ராஜேந்திரன்!

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது 100ஆவது முதல் தர போட்டியில் விளையாடினார். தற்போது இந்திய அணிக்கு துணை பயிற்சியாளராக இணைந்துள்ள அபிஷேக் நாயர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ கிங்ட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios