Asianet News TamilAsianet News Tamil

Hockey World Cup 2023: இந்தியா - இங்கிலாந்து போட்டி டிரா..! புள்ளி பட்டியல் அப்டேட்

ஹாக்கி உலக கோப்பையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. புள்ளி பட்டியல் அப்டேட்டை பார்ப்போம்.
 

hockey world cup 2023 india vs england match end as goalless draw and points table update
Author
First Published Jan 15, 2023, 9:23 PM IST

ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடர் ஒடிசாவில் நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பிரிவு ஏ - அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், தென்னாப்பிரிக்கா
பிரிவு பி - பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான்
பிரிவு சி - சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து
பிரிவு டி - இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், வேல்ஸ்

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி..! இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்தியா

இந்திய அணி முதல் போட்டியில் ஸ்பெய்னை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதல் இறுதி வரை கடுமையாக போராடியும் கூட இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. தங்களது முதல் போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற முடியாமல் ஆட்டம் டிராவானது.

இன்று நடந்த மற்றுமொரு போட்டியில் வேல்ஸ் அணியை ஸ்பெய்ன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிராக சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் மேலும் சில சாதனைகளை காலி செய்த கோலி.! சாதனை நாயகன் கிங் கோலி

புள்ளி பட்டியலில் பிரிவு ஏ-வில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகளும், பிரிவு பி-யில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி அணிகளும், பிரிவு சி-யில் நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளும் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இன்றைய போட்டி டிராவில் முடிந்ததால் பிரிவு டி-யில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் தலா ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios