ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் அந்திமா பால் வெண்கலம் வென்றுள்ளார்.

தென்கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் 53.31 வினாடிகளில் ஓடி இந்தியாவின் ஹீனா மல்லிக் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். இதே போன்று ஆண்களுக்கான வட்டி எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங் 55.66 மீ எறிந்து இந்தியாவிற்கு 2ஆவது தங்கம் வென்றார்.

எதுவுமே செய்யாமல் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!

பெண்களுக்கான 5000 மீ தடகளப் இந்தியாவின் அந்திமா பால் வெண்கலம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். அவர் 17:17.11 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். புஷ்ரா கான் கௌரி 18:15.98 வினாடிகளில் கடந்து 5ஆவது இடன் பிடித்துள்ளார்.

எனக்கு இப்போ சிராஜ், ஷமி தான் பிரச்சனை – டேவிட் வார்னர் ஓபன் டாக்!

இந்தப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற யோனேசவா நானகா மற்றும் மட்சுமோட்டோ அகாரி ஆகியோர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஜூன் 5ஆம் தேதி நாளை நடைபெறும் ஆண்களுக்கான 800 மீட்டர் தடகளப் போட்டியில் ஷியாம் மிலன் பிண்ட் மற்றும் ஷ்கீல் க்யூ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

16 வைடு எதிரொலி: ஓரங்கட்டப்பட்ட மதீஷா பதிரனா: இலங்கை 323 ரன்கள் குவிப்பு!

ஜூன் 5 ஆம் தேதி நடைபெறும் ஆண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டியில் ஷியாம் மிலன் பிண்ட் மற்றும் ஷகீல் க்யூ பங்கேற்கின்றனர். இதே போன்று பெண்களுக்கான இறுதிப் போட்டியில் அபிநயா ராஜராஜன் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FA Cup Final:7ஆவது முறையாக சாம்பியான யுனைடெட் சிட்டி அணி!

Scroll to load tweet…