16 வைடு எதிரொலி: ஓரங்கட்டப்பட்ட மதீஷா பதிரனா: இலங்கை 323 ரன்கள் குவிப்பு!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கை 323 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழையால் ரத்தானால் என்னாகும்?
இதையடுத்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 50 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்துள்ளது.
இதில், தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா மற்றும் திமுத் கருணாரத்னே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். நிசாங்கா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். கருணாரத்னே 52 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் உள்பட 78 ரன்கள் சேர்த்தார்.
FA Cup Final:7ஆவது முறையாக சாம்பியான யுனைடெட் சிட்டி அணி!
இவரைத் தொடர்ந்து வந்த சமீரா சமரவிக்ரமா 44 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தசுன் சனாகா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். வணிந்து ஹசரங்கா 29 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 29 ரன்களும் எடுக்கவே இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 323 ரன்கள் குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமான மதீஷா பதிரனா இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. இதே போன்று ஏஞ்சலோ மேத்யூஸ், துஷான் ஹேமந்த், லகிரு குமாரா ஆகியோரும் இடம் பெறவில்லை.
பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அகமது 9 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். முஜீப் 1 விக்கெட்டும், நபி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், 2024 டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் டேவிட் வார்னர்!