FA Cup Final:7ஆவது முறையாக சாம்பியான யுனைடெட் சிட்டி அணி!
இங்கிலாந்தில் நடந்த எஃப் ஏ கோப்பைக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கிளப் அணிகளுக்கு இடையிலான எஃப்.ஏ கோப்பைக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள விம்ப்ளே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியை காண்பதற்கு விராட் கோலி, அனுஷ்கா சர்மா, யுவராஜ் சிங், சுப்மன் கில் என்று பலரும் வருகை தந்திருந்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், 2024 டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் டேவிட் வார்னர்!
இந்தப் போட்டியில் மான்செஸ்டர் யுனெடெட் – மான்செஸ்டர் சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், போட்டியின் முதல் நிமிடத்திலேயே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், மான்செஸ்டர் சிட்டி அணியின் வீரர் முதல் கோல் அடித்தார்.
ஆடுகளத்திலிருந்து பலிபீடம் வரையில் பயணம் தொடங்குகிறது – ருதுராஜ் கெய்க்வாட் உட்கர்ஷா பவார் திருமணம்!
அதன் பிறகு 13 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் 1-1 என்று சமநிலையில் இருந்தன. இதையடுத்து 2ஆவது பாதி ஆட்டம் தொடங்கியதும், மான்செஸ்டர் சிட்டி அணியின் குண்டோகான் ஒரு கோல் அடிக்கவே சிட்டி அணி 2-1 என்று முன்னிலை பெற்றது.
புதிய ஜெர்சியுடன் போட்டோஷூட் எடுத்த இந்திய வீரர்கள்: வைரலாகும் புகைப்படம்!
அதன்பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியாக மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றி 7ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.