Asianet News TamilAsianet News Tamil

52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வெற்றி - ஹாக்கி ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு சென்ற இந்தியா!

ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் ஸ்ரீஜேஷின் சிறப்பான ஆட்டத்தால் பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 52 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பெற்றுள்ளது.

Harmanpreet Singh Lead Team India reached quarter final after Beat Australia by 3-2 in Hockey at Paris Olympics 2024 after 52 Long years rsk
Author
First Published Aug 2, 2024, 7:31 PM IST | Last Updated Aug 2, 2024, 7:35 PM IST

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திருந்தது.

IND vs SL 1st ODI: பதும் நிசாங்கா, துணித் வெல்லாலகே சிறப்பான அரைசதம் – இலங்கை 230 ரன்கள் குவிப்பு!

அதன் பிறகு எல்லா ஒலிம்பிக் போட்டியிலும் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெற்றது. 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி டிரா செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 4 ஆம் தேதி காலிறுதிப் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை 4.45 மணிக்கு ஹாக்கி போட்டி தொடங்கியது. போட்டியில் 12 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் ஒரு கோல் அடித்து இந்தியாவின் கோல் கணக்கை தொடங்கினார். இதைத் தொடர்ந்து 13 ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். இது ஒலிம்பிக் தொடரில் அவர் அடித்த 5ஆவது கோல் ஆகும்.

Paris 2024 Olympics: மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு தகுதி – இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கம் கன்ஃபார்ம்!

போட்டியில் 25ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் தாமஸ் கிரைக் ஒரு கோல் அடித்தார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா 2- 1 என்று பின் தங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து 32 ஆவது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றொரு கோலும் அடித்து இந்திய அணியை 3-1 என்று முன்னிலை படுத்தினார். பின்னர் போட்டியின் 55ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிளாக் கோவர்ஸ் ஒரு கோல் அடிக்கவே ஆஸ்திரேலியா 3-2 என்று பின் தங்கியிருந்தது.

இன்னும் ஒரு கோல் அடித்தால் டிரா என்ற நிலையில் ஆஸ்திரேலியா விளையாடியது. எனினும், ஆஸ்திரேலிய வீரர்களால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 4ஆம் தேதி காலிறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜெண்டினா ஆகிய 4 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் காலிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.

Paris 2024 Olympics: வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா – அங்கீதா பகத் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios