Paris 2024 Olympics: மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு தகுதி – இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கம் கன்ஃபார்ம்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் 7ஆவது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

Indian Bronze medalist Manu Bhaker reached final after Finished with 2nd in qualification round of the women's 25m pistol event at Paris Olympics rsk

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், 6 நாட்கள் முடிவில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைபற்றி பதக்க பட்டியலில் 44ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் 7ஆவது நாளான இன்று துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, ஜூடோ, ரோவிங், வில்வித்தை என்று பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Paris 2024 Olympics: வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா – அங்கீதா பகத் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

இதில், வில்வித்தையில் இரட்டையர் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கீதா பகத் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் பிற்பகல் 3.30 மணிக்கு மகளிருக்கான 25மீ பிஸ்டல் பிரிவுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரங்கனைகளான மனு பாக்கர் மற்றும் ஈசா சிங் இருவரும் போட்டி போட்டனர்.

Paris 2024 Olympics: இந்தியா விளையாடும் போட்டிகள் - Day 7: இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு!

இந்தப் போட்டியில் மனு பாக்கர் தகுதிச் சுற்றில் 292 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து ரேபிட் பயர் என்று சொல்லப்படும் எலிமினேஷன் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஈசா சிங் 291 புள்ளிகள் பெற்று 10ஆவது இடம் பிடித்து அடுத்த சுற்று போட்டியில் விளையாடினார். இதில், மனு பாக்கர் 590 புள்ளிகள் பெற்று 2ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டி நாளை 3ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஈசா சிங் இதில், 581 புள்ளிகள் பெற்று 18ஆவது இடம் பிடித்து ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இதே போன்று இதே பிரிவில் கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங் உடன் இணைந்து இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இதன் மூலமாக ஒரே ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

இந்தியாவின் நம்பிக்கை பிவி சிந்து உள்பட ஒரே நாளில் 4 வீரர்கள் தோல்வி – கடைசியாக லக்‌ஷயா பதக்கம் வெல்வாரா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios