Paris 2024 Olympics: வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா – அங்கீதா பகத் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது நாள் போட்டியில் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கீதா பகத் ஜோடி எலிமினேஷன் சுற்று போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Indian Pair Ankita Bhakat and Dhiraj Bommadevara entered into Quarterfinals in Archery Mixed Team event at Paris 2024 Olympics rsk

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 7ஆவது நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இன்று பிற்பகல் 1.19 மணிக்கு நடைபெற்ற வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கீத பகத் ஜோடியானது இந்தோனேஷியாவின் தியானந்தா சோய்னிருசா மற்றும் ஆரிஃப் பங்கஸ்து ஜோடியை எதிர்கொண்டது.

Paris 2024 Olympics: இந்தியா விளையாடும் போட்டிகள் - Day 7: இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு!

இதில், இந்திய ஜோடி தோல்வி அடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் நிலை இருந்தது. ஆனால், தொடக்க முதலே சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி 9, 10, 9, 9 என்று எய்து 37 புள்ளிகள் பெற்றது. 2ஆவது முறை 38 புள்ளிகள் பெற்றது. 3ஆவது முறையும் 38 புள்ளிகள் பெற்றது. இதன் மூலமாக 5-1 என்ற கணக்கில் இந்திய ஜோடியான தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கீதா பகத் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் நம்பிக்கை பிவி சிந்து உள்பட ஒரே நாளில் 4 வீரர்கள் தோல்வி – கடைசியாக லக்‌ஷயா பதக்கம் வெல்வாரா?

வில்வித்தை காலிறுதிப் போட்டி இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது. இதில், ஸ்பெயின் ஜோடியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்து வெளியேறினர். இதே போன்று மகளிருக்கான போட்டியில் பஜன் கவுர் மற்றும் தீபிகா குமாரியைத் தவிர மற்றவர்கள் தோல்வி அடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Paris 2024 Olympics: கடைசில பிவி சிந்துவும் தோல்வி – பேட்மிண்டனில் எல்லோருமே வெளியேற்றம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios