Asianet News TamilAsianet News Tamil

Paris 2024 Olympics: கடைசில பிவி சிந்துவும் தோல்வி – பேட்மிண்டனில் எல்லோருமே வெளியேற்றம்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் 6ஆவது நாளில் நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரிலிந்து வெளியேறியுள்ளார்.

Finally PV Sindhu Eliminated From Women's singles Round of 16 at Paris 2024 Olympics rsk
Author
First Published Aug 2, 2024, 1:55 AM IST | Last Updated Aug 2, 2024, 11:26 AM IST

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி மற்றும் வெண்கலம் என்று 2 பதக்கங்களை வென்று கொடுத்தவர் பிவி சிந்து. ஆதலால் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும், ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினார். அவருடன் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலும் அணிவகுப்பு நடத்தினார்.

Paris Olympics 2024:பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் சாத்விக் – சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி அடைந்து வெளியேற்றம்!

இந்த நிலையில் தான் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று 6ஆவது நாளில் பேட்மிண்டன் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு எலிமினேட்டர் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீனாவின் ஹி பிங்க்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில் ஆரம்பம் முதலே செட்டுகளை இழந்த பிவி சிந்து முதல் செட்டை 19-21 என்று இழந்தார்.

இதையடுத்து 2ஆவது செட்டையும் 14-21 என்று இழந்த நிலையில் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து எலிமினேட்டர் சுற்று போட்டியோடு வெளியேறினார். இனி பேட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென் மட்டுமே எஞ்சியிருக்கிறார். பேட்மிண்டன் தனிநபர் போட்டியில் லக்‌ஷய சென் 16ஆவது சுற்று போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் தைவான் நாட்டைச் சேர்ந்த சோ டியான் சென் உடன் மோதுகிறார்.

Olympics 2024: வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசலேவுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை – மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

இந்தியா சார்பில் பேட்மிண்டனில் போட்டியிட்ட அனைவருமே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு, மகளிர் ஒற்றையர் பிரிவு, ஆண்கள் இரட்டையர் மற்றும் மகளிருக்கான இரட்டையர் பிரிவு என்று எல்லாவற்றிலும் இந்திய வீரர்களான பிரணாய் ஹெச் எஸ், சாதிக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, தணிஷா க்ராஸ்டா, அஸ்வினி பொன்னப்பா என்று அனைவரும் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் கடைசியில் பிவி சிந்துவும் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

Paris 2024: ஒரே நாளில் இன்று இந்தியா குத்துச்சண்டை, தடகளம், வில்வித்தையில் தோல்வி: பதக்க பட்டியலில் கடைசி இடம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios