Paris Olympics 2024:பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் சாத்விக் – சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி அடைந்து வெளியேற்றம்

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் பேட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது.

Satwiksairaj Rankireddy and Chirag Shetty Pair loss in Quarter-final and eliminated in Badminton Mens Doubles at Paris 2024 Olympics rsk

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் 2024 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விஜ்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டியின் ஜோடியானது மலேசியாவின் ஆரோன் சியா டெங் போங் மற்றும் சோ வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-13, 14-21 மற்றும் 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து காலிறுதிப் போட்டியோடு வெளியேறியது.

Olympics 2024: வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசலேவுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை – மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

இதற்கு முன்னதாக குரூப் சுற்று போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் ஜோடி என்ற சாதனையை படைத்தது. எனினும், காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. எனினும் பேட்மிண்டன் தனிநபர் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷய சென் 16ஆவது சுற்று போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் தைவான் நாட்டைச் சேர்ந்த சோ டியான் சென் உடன் மோதுகிறார்.

Paris 2024: ஒரே நாளில் இன்று இந்தியா குத்துச்சண்டை, தடகளம், வில்வித்தையில் தோல்வி: பதக்க பட்டியலில் கடைசி இடம்!

இதே போன்று இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் மகளிருக்கான தனிநபர் போட்டியில் எலிமினேட்டர் சுற்று போட்டியில் பிவி சிந்து சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்கொள்கிறார். இதில் சிந்து வெற்றி பெற்றால் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறுவார். தோல்வி அடைந்தால் தொடரிலிருந்து வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியைப் போன்று டிக்கெட் செக்கர் வேலை; இந்தியாவிற்கு 3ஆவது பதக்கம் வென்று கொடுத்த ஸ்வப்னில் சிங்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios