Hangzhou Asian Games 2023: இந்திய தேசிய கொடியை ஏந்தி வந்த ஹர்மன்ப்ரீத் சிங், லோவ்லினா போர்கோஹைன்!
ஹாங்சோவில் தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி டீம் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி வந்து அணிவகுப்பு நடத்தினர்.
ஆசிய விளையாட்டு போட்டியின் 19ஆவது சீசன் இன்று சீனாவில் ஹாங்சோவில் பிரமாண்டமாக தொடங்கியது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக சீனாவில் தொடங்கியது. இதில், போட்டியில் பங்கேற்கும் ஆசிய நாடுகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்தியா சார்பில் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் ஆகியோர் இணைந்து தேசிய கொடியை ஏந்திச் சென்று அணிவகுப்பு நடத்தினர்.
அவர்களை பின் தொடர்ந்து இந்திய வீரர், வீராங்கனைகள் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடத்தினர். சீனா, மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான், உஸ்பெகிஸ்தான், மியான்மர், மங்கோலியா, ஜப்பான், நேபாள், ஏமன், பிலிப்பைன்ஸ், கத்தார், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஜோர்தான், தாய்லாந்து, தஜிகிஸ்தான், சிரியா,வியட்நாம், மாலத்தீவு, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பு நடத்தினர்.
MS Dhoni Ad Shooting: மோகன்லால் உடன் இணைந்து விளம்பரத்தில் நடிக்கும் தோனி: வைரலாகும் புகைப்படம்!
ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் சென்சென், காங்காங் மற்றும் லியான்லியான் என்று 3 ரோபோட்டுகள் பங்கேற்றுள்ளன. அவரை அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் இடம் பெற்றன. நீர், மலை மற்றும் நிலவு ஆகியவற்றை மையக்கருவாக கொண்டு இந்த விழா மேடையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாட உள்ளனர்.
ரூ.450 கோடி பட்ஜெட், வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 655 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அக்டோபர் 8 ஆம் தேதி வரையில் 20 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் 655 இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 61 பிரிவுகளில் மொத்தமாக 482 விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியிடுகின்றனர். விழா நடைபெறும் இடத்தில் அதற்கான வசதி இல்லை என கூறப்படுகிறது. இந்த ஆண்டு 45 ஆசிய நாடுகளில் இருந்து 12,000 வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 482 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய அணியின் உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை பிரதமருக்கு வழங்கிய சச்சின்!
வில்வித்தை - அதானு தாஸ், நீரஜ் சவுகான், அதிதி ஜெய்ஸ்வால், சிம்ரன்ஜீத் கவுர், ரஜத் சவுகான், ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம்
பேட்மிண்டன் - சிராக் ஷெட்டி, எம்.ஆர்.அர்ஜூன், அஷ்மிதா சாலிஹா, மாளவிகா பன்சோத், ட்ரீசா ஜாலி, தனிஷா க்ராஸ்டோ, எச்.எஸ்.பிரணாய், மிதுன் மஞ்சுநாத், கிதாம்பி ஸ்ரீகாந்த்
குத்துச்சண்டை - ஜாஸ்மின், லோவ்லினா, மனிஷா மௌன், நிகத் ஜரீன், ஸ்வீட்டி போரா
மகளிர் கிரிக்கெட் - ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராஜேஸ்வரி கயக்வாட், மின்னு மணி, கனிகா அஹுஜா, உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), அனுஷா பரெட்டி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, டைட்டஸ் சாது.
வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சச்சின், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர்!
கிரிக்கெட் ஆண்கள் அணி - ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ( விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள் பட்டியல்: சாய் சுதர்சன், வெங்கடேஷ் ஐயர், சாய் கிஷோர், தீபக் ஹூடா, யாஷ் தாக்கூர்.
மொத்தம் 14 போட்டிகள் 14 பெண்கள் கிரிக்கெட் அணிகளும், 18 போட்டிகள் 18 ஆண்கள் கிரிக்கெட் அணிகளும் விளையாடும். 19வது ஆசிய விளையாட்டு 2022 ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.