Asianet News TamilAsianet News Tamil

ரூ.450 கோடி பட்ஜெட், வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!

வாரணாசியில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் கட்டப்படும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

Prime Minister Modi laid the foundation stone for Varanasi Cricket Stadium today rsk
Author
First Published Sep 23, 2023, 3:56 PM IST

ஆன்மீக தலமாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தற்போது அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வருகை தந்து ரூ.450 கோடி பட்ஜெட்டி கட்டப்படும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான்களான ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Prime Minister Modi laid the foundation stone for Varanasi Cricket Stadium today rsk

இந்திய அணியின் உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை பிரதமருக்கு வழங்கிய சச்சின்!

வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படவுள்ளது. கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

Prime Minister Modi laid the foundation stone for Varanasi Cricket Stadium today rsk

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சச்சின், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர்!

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஐசிசி வெளியிட்டது. அதுமட்டுமின்றி உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது.

வாரணாசியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: 23ம் ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

இந்த நிலையில், தான் இன்று வாரணாசிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் புதிய ஜெர்சியை வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் கையொப்பமிட்ட பேட் ஒன்றை பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கியுள்ளனர்.

Prime Minister Modi laid the foundation stone for Varanasi Cricket Stadium today rsk

India vs Australia: ஆஸியை கண்டால் பயமா? ஹாட்ரிக் கோல்டன் டக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யகுமார் யாதவ்!

இந்த நிலையில், இந்த அடிக்கல் நாட்டு விழாவின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: இது முழுக்க முழுக்க சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது விளையாட்டை பிரபலப்படுத்தவும், இளைஞர்களிடையே விளையாட்டு திறமையை வளர்க்கவும் உதவும் என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து வரவிருக்கும் வாரணாசி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் திரிசூல வடிவ விளக்குகள், பிறை வடிவ கூரை, டம்ரு வடிவ ஊடக மையம் மற்றும் பெல் பத்ரா வடிவங்களைக் கொண்ட மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். 

  • தீம் - சிவபெருமான்.
  • பிளட்லைட்கள் - திரிசூலம்
  • கேட்ஸ் - டம்ரு.
  • கதவுகள் - டம்ரு.
  • ஓய்வறை - டம்ரு.
  • நுழைவு வாயில் - பெல்பத்ரா.
  • ஸ்டேடியம்- திரிசூலம்.
  • இருக்கை ஏற்பாடு - கங்கா காட் (கங்கை ஆற்றின் படிக்கட்டு போன்று)

Prime Minister Modi laid the foundation stone for Varanasi Cricket Stadium today rsk

Follow Us:
Download App:
  • android
  • ios