நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், தவறான தகவலை பரப்பாதீர்கள்: சாக்ஷி மாலிக்!
டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.
நள்ளிரவில் அமித் ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு; சட்டம் தன் பணியைச் செய்யும் என உறுதி
பிரிஜ் பூஷன் சிங் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயற்சிக்க, வினோத் போகத், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
டீம் இந்தியாவுக்கு குட் நியூஸ்; WTC இறுதிப் போட்டியிலிருந்து ஆஸி, வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல்!
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும் போராட்டத்திற்கு தயாராகினர்.
இந்த நிலையில், இந்த போராட்டத்திலிருந்து சாக்ஷி மாலிக் வெளியேறியதாகவும், போராட்டம் கைவிடப்பட்டதாகவும் செய்தி வெளியானது. சாக்ஷி மாலிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்திய நிலையில், சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் தனது ரயில்வே பணியில் சேர்ந்ததாகவும் செய்தி வெளியாகின.
சச்சின், கோலி மற்றும் சுப்மன் கில் இவர்களில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்?
இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த சாக்ஷி மாலிக் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும் என்றும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.