நள்ளிரவில் அமித் ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு; சட்டம் தன் பணியைச் செய்யும் என உறுதி
நள்ளிரவு சந்திப்பின்போது, "சட்டம் அதன் பணியைச் செய்யும்" என மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் அமித் ஷா உறுதி அளித்தார் எனக் கூறப்படுகிறது.
பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சனிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு சனிக்கிழமை நள்ளிரவு டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் இல்லத்தில் நடந்ததாக ஒலிம்பிக் வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
இரவு 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும், அதில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத், சத்யவர்த் காடியன் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது மல்யுத்த வீரர்கள், ஒரு சிறுமி உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அமைச்சர் அமித் ஷாவிடம் குற்றம்சாட்டினர். மேலும் பிரிஜ் பூஷன் மீது பாரபட்சமற்ற விசாரணை நடந்த விரைவான நடவடிக்கையை தேவை என்றும் கோரியுள்ளனர்.
275 பேர் உயிரிழப்பு; அசுர கதியில் வேலை; மீண்டும் ரயில்கள் இயக்கம்; மனம் உருகிய அமைச்சர்!!
சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மல்யுத்த வீரர்களுக்கு அமித் ஷா உறுதி அளித்தார். "சட்டம் அதன் பணியைச் செய்யும்" என்று அவர் மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க மல்யுத்த வீரர்கள் விதித்த 5 நாள் காலக்கெடு நேற்று முடிவடைந்ததை அடுத்து, போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முயன்றதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
மல்யுத்தக் கூட்டமைப்புத் தலைவருக்கு எதிரான தங்களின் போராட்டம் பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டும் மல்யுத்த வீரர்கள், கடந்த மாதம் ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றுக்குச் சென்று தங்கள் பதக்கங்களை வீசி ஏறிய முடிவு செய்தனர். அப்போது விவசாயிகளின் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட விவசாயிகள் தலையீட்டால் அவர்கள் தங்கள் முடிவை தற்காலிகமாக கைவிட்டனர்.
முன்னதாக, புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடந்தபோது அங்கு பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிய டெல்லி போலீஸ் பின்னர் அவர்களை விடுவித்தாலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்தது.
ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மல்யுத்த வீரர் வீராங்கனைகள் காவல்துறையினரால் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக டெல்லி போலீசார் இரண்டு முதல் தகவல் அறிக்கை அல்லது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் டெல்லி போலீஸ் கூறியுள்ளது.
டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து கொலைவெறி! 3 மாதமாக திட்டம் போட்டு கொலை ஆசையை நிறைவேற்றிய இளம்பெண்!