சச்சின், கோலி மற்றும் சுப்மன் கில் இவர்களில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்?
இந்திய அணியைப் பொறுத்த வரையில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த சுப்மன் கில் 17 போட்டிகளில் விளையாடி 890 ரன்கள் குவித்துள்ளார். ஆரம்பத்தில் சச்சினா? கோலியா? என்ற காலம் இருந்த நிலையில், தற்போது கில்லா? கோலியா? என்ற விவாதம் வந்துவிட்டது.
சுப்மன் கில்லுக்காக லண்டன் வரை வந்த சாரா டெண்டுல்கர்?
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியிருப்பதாவது: சச்சின் மற்றும் கோலியை ஒப்பிடும் போது பேட்டிங்கில் கோலிக்கு சில குறைகள் இருந்தது. உதாரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஆண்டர்சன் ஓவரை எதிர்கொள்ள விராட் கோலி திணறினார். மேலும், கோலிக்கு இந்த தொடர் மோசமான தொடராக அமைந்தது. அதோடு அவர் மிது விமர்சனமும் எழுந்தது.
இஷான் கிஷானுக்கு வாக்களிக்கும் ரசிகர்கள்: விக்கெட் கீப்பர் யார்?
ஆனால், தற்போது சுப்மன் கில்லைப் பொறுத்த வரையில் அவரது பேட்டிங் திறமை சச்சினைப் போன்று உள்ளது. அவரை ஆட்டமிழக்க செய்வது என்பதும் மிகவும் கடுமையான ஒன்று. பேட்டிங்கைப் பொறுத்த வரையில் அவரிடம் எந்த குறையும் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிரனாவை உட்கார வச்சதற்கு பலன் கிடைச்சிருச்சு: இலங்கை 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
WTC Final: India vs Australia - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்தியா கடந்து வந்த பாதை!