சுப்மன் கில்லுக்காக லண்டன் வரை வந்த சாரா டெண்டுல்கர்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சுப்மன் கில் இங்கிலாந்து வந்துள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவும் இங்கிலாந்து வந்துள்ளார்.
இந்திய அணியின் இளம் கிரிக்கெ வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தவர். ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 208 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளிலும் சதம் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் சதம் அடித்திருக்கிறார். இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் சுப்மன் கில் கடந்த காலங்களில் சாரா அலி கான் மற்றும் சாரா டெண்டுல்கர் ஆகியோருடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்படுகிறது.
இஷான் கிஷானுக்கு வாக்களிக்கும் ரசிகர்கள்: விக்கெட் கீப்பர் யார்?
ஆனால், கடந்த சில மாதங்களாக சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவர் குறித்தும் வதந்தி தான் பரவி வருகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூட கூறப்பட்டது. சுப்மன் கில் இருக்கும் இடமெல்லாம் சாரா டெண்டுல்கர் இருக்கிறார் என்றும், இருவரும் காதலித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து இருவரும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
WTC Final: India vs Australia - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்தியா கடந்து வந்த பாதை!
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து வந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில், சுப்மன் கில்லும் இடம் பெற்றுள்ளார். சுப்மன் கில் இங்கிலாந்து வந்துள்ள நிலையில், சாரா டெண்டுல்கரும் இங்கிலாந்து வந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பதிரனாவை உட்கார வச்சதற்கு பலன் கிடைச்சிருச்சு: இலங்கை 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அதே போன்று சாரா டெண்டுல்கரும் இன்ஸ்டாவில் லண்டன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.