Asianet News TamilAsianet News Tamil

வினேஷ் போகத் தகுதி நீக்கம் – இறுதிப் போட்டி யார் யாருக்கு? மாற்று வீராங்கனை யார்? வெண்கலப் பதக்கம் யாருக்கு?

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக கியூபா வீராங்கனை குஸ்மான் லோபஸ் மாற்று வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Do You Know who is Replacement athletes of Vinesh Phogat who is disqualified in Womens 50kg Wrestling Final Event at Paris 2024 Olympics rsk
Author
First Published Aug 7, 2024, 3:32 PM IST | Last Updated Aug 7, 2024, 3:32 PM IST

பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில், இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 60ஆவது இடத்தில் உள்ளது. எனினும், தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை. இதற்கான ரேஸில் இடம் பெற்ற வினேஷ் போகத் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூடுதல் எடை காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உடல் எடையை குறைக்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல: முடி வெட்டுவது, ரத்தத்தையும் வெளியேற்றியும் பலனில்லை!

மகளிருக்கான 50 கிலோ பிரிவில் 16ஆவது சுற்று போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுய் சுசாகியை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்சானா விஸ்லிவ்னா லிவாக்கை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்க் முன்னேறினார். நேற்று இரவு 10.25 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபா நாட்டைச் சேர்ந்த யூஸ்னிலிஸ் குஸ்மான் லோப்ஸை எதிர்கொண்டார்.

இதை மட்டும் செய்திருந்தால் போதும் – வினேஷ் போகத் தகுதி பெற்றிருப்பார்?

இதில், லோப்ஸை ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல் அடுத்தடுத்து புள்ளிகள் பெற்று 5-0 என்று வெற்றி பெற்று வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலமாக இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கூடுதல் எடையை குறைக்க பல வழிகளிலும் முயற்சித்தும் பலன் இல்லை.

இந்த நிலையில் தான் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக இறுதிப் போட்டிக்கு குஸ்மான் லோப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய அவர் தான் இறுதிப் போட்டியில் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த சாரா அன் ஹில்டெப்ராண்ட் என்ற வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் எப்படி?

இந்தப் போட்டி 12ஆம் நாளான இன்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வினேஷ் போகத்திடம் 16ஆவது சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறிய ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுய் சுசாகி மற்றும் காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்சானா லிவாக் இருவரும் போட்டி போடுகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறிய வினேஷ் போகத், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும் காலிறுதி போட்டியோடு வெளியேறினார். இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேறியுள்ளார்.

உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி – நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios