Asianet News TamilAsianet News Tamil

நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்கு ரூ.5.72 கோடி செலவு செய்த விளையாட்டு அமைச்சகம்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா 5 வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கம் உள்பட 6 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 71 ஆவது இடத்தில் உள்ளது.

Do You Know how much amount spent on Indian Athletics Player Neeraj Chopra and Vinesh Phogat at Paris 2024 Olympics rsk
Author
First Published Aug 11, 2024, 2:19 PM IST | Last Updated Aug 11, 2024, 2:19 PM IST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி 33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று, தடகளம், கோல்ஃப், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், வில்வித்தை, ஹாக்கி, மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை என்று 16 விளையாட்டுகளில் இடம் பெற்று விளையாடினர். இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசலே ஆகியோர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.

வயநாடு மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்த இளம் கிராண்ட் செஸ் மாஸ்டர் டி குகேஷ்!

இதே போன்று, ஹாக்கி இந்தியா அணி வெண்கலப் பதக்கம் வென்றது. நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றவே, அமன் செராவத் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இந்த தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக நீரஜ் சோப்ரா 2 இடங்களில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் பயிற்சி மேற்கொண்ட நீரஜ் சோப்ரா, அதன் பிறகு ஐரோப்பாவில் பயிற்சி செய்து வந்துள்ளார்.  இதற்காக விளையாட்டு அமைச்சகம் ரூ.5.72 கோடி செலவு செய்துள்ளது.

Vinesh Phogat : வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா? தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு

இந்த தொடரில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிக்கு என்று அரசு ரூ.470 கோடி வரையில் செலவிட்டுள்ளது. அதிகபட்ச தொகையாக தடகளத்திற்கு ரூ.96.08 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. பேட்மிண்டனுக்கு ரூ.72.02 கோடி, குத்துச்சண்டை ரூ.60.93 கோடி, துப்பாக்கிச்சுடுதல் ரூ.60.42 கோடி, வில்வித்தைக்கு ரூ.39.18 கோடி, ஜூடோவிற்கு ரூ.6.3 கோடி, மல்யுத்தம் ரூ.37.80 கோடி மற்றும் பளுதூக்குதல் ரூ.26.98 கோடி என்று வீரர்களின் பயிற்சிக்கு நிதி வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்.. வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த இளம் இந்திய வீரர் அமன் செராவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இது தவிர, குதிரையேற்றம் ரூ.97 லட்சம், டென்னிஸ் ரூ.1.67 கோடி, கோல்ஃப் ரூ.1.74 கோடி, ரோயிங் ரூ.3.89 கோடி, நீச்சல் ரூ.3.9 கோடி, சைலிங் ரூ.3.78 கோடி, டேபிள் டென்னிஸ் ரூ.12.92 கோடி என்று அரசு நிதியுதவி அளித்திருக்கிறது. மத்திய அரசு வழங்கிய நிதியுதவி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களும், பயிற்சி முகாம்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் பயிற்சிக்கு மட்டும் விளையாட்டு அமைச்சகம் ரூ.70.45 கோடி செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios