வயநாடு மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்த இளம் கிராண்ட் செஸ் மாஸ்டர் டி குகேஷ்!
கேரளா வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக செஸ் வீரர் குகேஷ் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில், கடந்த மாதம் ஜூலை 30ஆம் தேதி, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள் மக்கள் குடியிருப்பு மீது விழுந்தது மட்டுமின்றி, மண் சரிவு ஏற்பட்டு 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தது. ஒட்டு மொத்த இந்தியாவையும், அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில்... இதுவரை 350 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தும், பலத்த காயங்களுடனும் உயிரிழந்துள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர், தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Vinesh Phogat : வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா? தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு
இயற்கையின் சீற்றாதால், ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளா வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ப்பட்ட சேதங்களை சீர் செய்து, மக்கள் மீண்டும் இழல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், இந்த நிலச்சரிவு பல உயிர்களை சூறையாடி, மக்களின் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிட்டது.
நிலச்சரிவால் 3 கிராமமே நிலைகுலைத்து போன நிலையில், இதன் பாதிப்பு சுமார் 5000 கோடி அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. வயநாட்டை சேர்ந்த ஏராளமான மக்கள், தற்போது தங்களின் உடமை, உறவு, வீடு போன்றவற்றை பறிகொடுத்துள்ள நிலையில், பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவுகள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்.. வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த இளம் இந்திய வீரர் அமன் செராவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே பிரபலங்கள் மற்றும் வசதி படைத்த பலர் தங்களால் முடிந்த நிதியை கொடுத்து வரும் நிலையில் தமிழக இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு உலக சாம்பியன் மற்றும் சீன வீரர் டிங் லிரன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் இருவரும் மோத உள்ளனர். இந்த தொடரானது சிங்கப்பூரில் நடைபெற இருப்பதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அண்மையில் டி குகேஷ் உலகின் நம்பர் 1 ஜூனியர் செஸ் வீரராக அறிவிக்கப்பட்டார். இதற்கான பாராட்டு விழா தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்.. Olympic Gold Medal Price: பாரிஸ் 2024 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செஸ் பேஸ் இந்தியாவின் முதன்மை நிர்வாக அதிகாரி சாகர் ஷா கலந்து கொண்டார். அதோடு மட்டுமின்றி இந்த விழாவில் சிறப்பம்சமாக 220 டிரோன் கேமராக்கள் மூலமாக குகேஷிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குகேஷிற்கு பென்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது கேரளா வயநாடு நிலச்சரிவால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவும் வகையில் தனது பங்காக ரூ.10 லட்சத்தை நிவாரண நிதியாக குகேஷ் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் இனி வரும் காலங்களில் செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.