Asianet News TamilAsianet News Tamil

Hockey World Cup 2023: இன்றைய போட்டியில் அடுத்தடுத்து பலப்பரீட்சை நடத்தும் டீம் என்னென்ன தெரியுமா?

இன்று நடக்கும் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் சிலி அணிகளும், அதன் பிறகு நெதர்லாந்து - மலேசியா அணிகளும், பெல்ஜியம் - கொரியா அணிகளும், ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகளும் மோதுகின்றன.

Do you know how many team will conduct tests in today's FIH Odisha Hockey Men's World Cup 2023 Match
Author
First Published Jan 14, 2023, 10:13 AM IST

ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடர் ஒடிசாவில் நேற்று தொடங்கியது. இதற்கான தொடக்க விழா கடந்த 9 ஆம் தேதி கட்டாக் நகரில் நடந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. ஆனால், அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை ஆண்களுக்கான ஹாக்கி தொடர் லீக் போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய பகுதிகளில் நடக்கிறது.

Hockey World Cup 2023: முதல் போட்டியில் ஸ்பெய்னை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி

4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவில் உள்ள 4 அணிகளும், மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். குரூப்பில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நேற்று பிற்பகல் 1 மணிக்கு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஜெண்டினா 1-0 என்ற கணக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!

பிற்பகல் 3 மணிக்கு நடந்த 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலியா அடுத்தடுத்து 8 கோல்கள் 8-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடியது. மாலை 5 மணிக்கு நடந்த 3ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இதில், இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நேற்று இரவு 7 மணிக்கு நடந்த 4ஆவது போட்டியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த போட்டியின் 13வது நிமிடத்தில் இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ் முதல் கோல் அடித்தார். அடுத்த 13வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்திக் 2வது கோல் அடித்தார்.

கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் கன்பார்ம்: தேதி குறிச்சாச்சு, கெஸ்ட் ஹவுஸ் கூட ரெடி!

ஆனால், ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக இந்தியா 2-0 என்ற கணக்கில் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கான அடுத்த போட்டி வரும் 15 ஆம் தேதி நடக்கிறது. இன்று நடக்கும் 5ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியும், சிலி அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் 6ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் மலேசியா அணிகள் மோதுகின்றன.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக அவரை இறக்குங்க.. சும்மா தெறிக்கவிட்ருவாப்ள - ஓஜா

மாலை 5 மணிக்கு தொடங்கும் 7ஆவது போட்டியில் பெல்ஜியம் அணியும், கொரியா அணியும் மோதுகின்றன. இதே போன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் 8ஆவது போட்டியில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சுழல் பந்து வீச்சாளர்களில் யார் இடம் பெறுவார்கள்?

Follow Us:
Download App:
  • android
  • ios