IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக அவரை இறக்குங்க.. சும்மா தெறிக்கவிட்ருவாப்ள - ஓஜா
கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பண்ட் ஐபிஎல் 16வது சீசனில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக யாரை ஆடவைக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் இன்னும் ஒருசில மாதங்களில் தொடங்கவுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அண்மையில் கார் விபத்தில் சிக்கி மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் ஐபிஎல் 16வது சீசனில் ஆடமாட்டார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட், ஐபிஎல்லில் ஆடமாட்டார் என்பதை கங்குலி உறுதி செய்துவிட்டார். எனவே ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக யார் ஆடுவது, யார் கேப்டன்சி செய்வார் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.
இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் அந்த வீரர்..! மிகப்பெரிய மேட்ச் வின்னருக்கு காம்ரான் அக்மல் புகழாரம்
இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா, டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ஃபிலிப் சால்ட் ஆடலாம். அந்த அணி நிர்வாகமும் பயிற்சியாளர்களும் ஃபிலிப் சால்ட்டை ஆடவைப்பது குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று ஓஜா தெரிவித்தார்.
இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஸ்பின் அஸ்திரம்..! யார் இந்த டாட் மர்ஃபி..?