இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் அந்த வீரர்..! மிகப்பெரிய மேட்ச் வின்னருக்கு காம்ரான் அக்மல் புகழாரம்
இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த பொக்கிஷமான வீரர் ஹர்திக் பாண்டியா என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கிறது. கடைசியாக 2019ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணி அதன்பின்னர் 2015 மற்றும் 2019ல் நடந்த 2 உலக கோப்பைகளிலும் அரையிறுதியில் தோற்று வெளியேறிய நிலையில், இந்த முறை சொந்த மண்ணில் ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக தயாராகிவருகிறது.
ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளது பிசிசிஐ. அந்த 20 வீரர்கள் மட்டுமே உலக கோப்பைக்கு முன் நடக்கவுள்ள அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் சுழற்சி முறையில் களமிறக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஸ்பின் அஸ்திரம்..! யார் இந்த டாட் மர்ஃபி..?
இந்நிலையில், இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் ஹர்திக் பாண்டியா என்றும், அவர் தான் இந்திய அணியின் பெரிய பலம் என்றும் காம்ரான் அக்மல் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய காம்ரான் அக்மல், நெருக்கடியான சூழல்களில் ஹர்திக் பாண்டியா அபாரமாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கிறார். பேட்டிங்கில் தேவையான நேரங்களில் பார்ட்னர்ஷிப் அமைக்கிறார். நெருக்கடியான நேரங்களில் பவுலிங்கும் வீசுகிறார். இப்படியாக, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அழுத்தமான சூழல்களை சிறப்பாக கையாண்டு ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கிறார். அவர் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்.
ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியும் சிறந்த காம்பினேஷன் என்பது கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஹர்திக் பாண்டியா இருக்கும்போது, அணி கூடுதல் வலிமையானதாக இருக்கும். ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையான ஓய்வை வழங்கி அவரது பணிச்சுமையை குறைத்து, ஃபிட்னெஸை இந்திய அணி நிர்வாகம் பராமரிக்கவேண்டும். அப்போதுதான், அவரை பெரிய தொடர்களில் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று காம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக நடந்துவரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்டது. 2 ஒருநாள் போட்டியில் 216 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 86 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கேஎல் ராகுல் - ஹர்திக் பாண்டியா இணைந்து 5வது விக்கெட்டுக்கு 75 ரன்களை சேர்த்தனர். அந்த பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா 36 ரன்கள் அடித்து முக்கியமான பங்களிப்பு செய்தார்.