MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் கன்பார்ம்: தேதி குறிச்சாச்சு, கெஸ்ட் ஹவுஸ் கூட ரெடி!

கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் கன்பார்ம்: தேதி குறிச்சாச்சு, கெஸ்ட் ஹவுஸ் கூட ரெடி!

இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுலுக்கும், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் வரும் 23 ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானதோடு மட்டுமின்றி அதியா ஷெட்டியின் விக்கிப்பீடியா பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 13 2023, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
அதியா ஷெட்டி

அதியா ஷெட்டி

தமிழ் சினிமாவில் 12பி, தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் தான் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி. இவர், ஹீரோ, முபாரகான், மோட்டிஜோர் சக்னாஜோர், நவாப்ஷாடே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
கே எல் ராகுல் - அதியா ஷெட்டி

கே எல் ராகுல் - அதியா ஷெட்டி

கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். ஆங்கிலப்புத்தாண்டு தினத்தைக் கூட இருவரும் துபாயில் வைத்து கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களைல் வைரலானது. 

38
கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்:

கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்:

வரும் 23 ஆம் தேதி கே எல் ராகுலுக்கும் மற்றும் அதியா ஷெட்டிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அதியா ஷெட்டியின் விக்கிப்பீடியா பக்கத்திலும் இது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காண்டாலா பகுதியில் உள்ள சுனில் ஷெட்டியின் விருந்தினர் மாளிகையான ஜஹானில் வைத்து இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. 

48
சங்கீத் நிகழ்ச்சி

சங்கீத் நிகழ்ச்சி

இவர்களது திருமண விழா வரும் 21 ஆம் தேதி முதலே சங்கீத நிகழ்ச்சி, மெஹந்தி என்று கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இதில், அதியா ஷெட்டியின் சகோதரர் அஹான் மற்றும் அவரது பெற்றோர்கள் இந்த சங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்க இருக்கின்றனர். 

58
சினிமா பிரபலங்கள்:

சினிமா பிரபலங்கள்:

கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமண நிகழ்ச்சியின் பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப், அக்‌ஷய் குமார், எம் எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

68
கே எல் ராகுல்

கே எல் ராகுல்

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றுள்ள கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். 

78
3ஆவது ஒரு நாள் போட்டி

3ஆவது ஒரு நாள் போட்டி

ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்று கைப்பற்றிய நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 15 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் கே எல் ராகுல் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

88
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்

அதுமட்டுமின்றி வரும் 18 ஆம் தேதி இந்தியா வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் கே எல் ராகுல் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது. அதே போன்று ஆஸ்திரேலியா தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் தான்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Recommended image2
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Recommended image3
CSK: “சேப்பாக்கத்தில் இன்று உயிர்ப்போர்..! தோற்றால் CSK கனவு முடிவு – SRH காத்திருக்கும் அதிர்ச்சி!”
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved