Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

India Squad announced for first 2 Tests matches against Australia
Author
First Published Jan 14, 2023, 9:51 AM IST

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்த இலங்கை அணி தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியுற்ற இலங்கை அணி 0-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது. இதையடுத்து 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது.

கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் கன்பார்ம்: தேதி குறிச்சாச்சு, கெஸ்ட் ஹவுஸ் கூட ரெடி!

இலங்கை அணியைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஆனால், 2 டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்தது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் முறையாக நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை பாகிஸ்தானில் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக அவரை இறக்குங்க.. சும்மா தெறிக்கவிட்ருவாப்ள - ஓஜா

வெற்றியோடு இந்தியா வரும் நியூசிலாந்து அணி இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் கூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகால், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்,

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் குடும்ப கடமைகள் காரணமாக இடம் பெறவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ராஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அசாம் எணிக்கு எதிரான மும்பை அணியில் இடம் பெற்று அதிரடியாக ஆடி 379 ரன்கள் குவித்து சாதனை படைத்த பிரித்வி ஷா தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

ஜனவரி 18 - இந்தியா - நியூசிலாந்து - முதல் ஒரு நாள் போட்டி - ஹைதராபத்

ஜனவரி 21 - இந்தியா - நியூசிலாந்து - 2ஆவது ஒரு நாள் போட்டி - ராய்பூர்

ஜனவரி 24 - இந்தியா - நியூசிலாந்து - 3ஆவது ஒரு நாள் போட்டி - இந்தூர்

ஜனவரி 27 - இந்தியா - நியூசிலாந்து - முதல் டி20 போட்டி - ராஞ்சி

ஜனவரி 29 - இந்தியா - நியூசிலாந்து - 2ஆவது டி20 போட்டி - லக்னோ

பிப்ரவரி 01 - இந்தியா - நியூசிலாந்து - 3ஆவது டி20 போட்டி - அகமதாபாத்

 

 

இதையடுத்து, இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்த நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இஷான் கிஷான், கே எஸ் பரத், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், போட்டி நடக்கும் போது தான் அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்பது குறித்து தெரியவரும்.

Hockey World Cup 2023: முதல் போட்டியில் ஸ்பெய்னை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ்.

IND vs AUS - Series:

பிப்ரவரி 09 - 13 - இந்தியா - ஆஸ்திரேலியா - முதல் டெஸ்ட் - நாக்பூர்

பிப்ரவரி 17 - 21 - இந்தியா - ஆஸ்திரேலியா - 2ஆவது டெஸ்ட் - டெல்லி

மார்ச் 01 - 05 - இந்தியா - ஆஸ்திரேலியா - 3ஆவது டெஸ்ட் - தர்மசாலா

மார்ச் 09 - 13 - இந்தியா - ஆஸ்திரேலியா - 4ஆவது டெஸ்ட் - அகமதாபாத்

மார்ச் 17 - இந்தியா - ஆஸ்திரேலியா - முதல் ஒரு நாள் போட்டி -  மும்பை

மார்ச் 19 - இந்தியா - ஆஸ்திரேலியா - 2ஆவது ஒரு நாள் போட்டி - விசாகப்பட்டினம்

மார்ச் 22 - இந்தியா - ஆஸ்திரேலியா - 3ஆவது ஒரு நாள் போட்டி - சென்னை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சுழல் பந்து வீச்சாளர்களில் யார் இடம் பெறுவார்கள்?

நாளை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடக்க உள்ள நிலையில், இந்திய அணி வீர்ர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios