டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக மூத்த பத்திரிகையாளரான ரஜத் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி.டி.சி.ஏ எனப்படும் டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதனால், உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்று  பிறப்பித்து இருந்தது.

அதன்படி, நீதிபதி விக்ரம்ஜித் சென் சங்கத்தின் செயல்பாடுகளை இத்தனை நாள்கள் நிர்வாகம் செய்துவந்தார்.

இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைப்பெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு ரஜத் சர்மா போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன்லால் போட்டியிட்டார்.

இதில், ரஜத் சர்மா 517 வாக்குகள் வித்தியாசத்தில் மதன்லாலை வெற்றி கண்டார்.

சர்மாவுக்கு 1531 வாக்குகளும், மதன்லாலுக்கு 1004 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஏனைய 12 பதவிகளையும் சர்மா குழுவே கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.