கிரிக்கெட் வீரர்கள் தங்களது கனவு அணியை தேர்வு செய்வது வழக்கம். முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலர், தங்களது கனவு அணியை தேர்வு செய்வர்.

அண்மையில் கூட கெவின் பீட்டர்சன், மூன்றுவிதமான கிரிக்கெட்டிற்கும் தனது கனவு அணியை அறிவித்திருந்தார். அதில், மூன்றுவிதமான போட்டிக்குமே இந்திய அணியின் முன்னாள் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக்கைத்தான் தொடக்க வீரராக தேர்வு செய்திருந்தார். 

அந்த வகையில் தற்போது, தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தனது கனவு டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். டேல் ஸ்டெயினின் கனவு அணியில் இடம்பிடித்த இந்திய வீரர்கள் சச்சினும் சேவாக்கும் மட்டும்தான். 

சேவாக்கை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ள ஸ்டெயின், சச்சினை நான்காம் வரிசை வீரராக தேர்ந்தெடுத்துள்ளார். டேல் ஸ்டெயினின் கனவு அணியின் விக்கெட் கீப்பர் குமார் சங்ககரா. 

ஆல்ரவுண்டர்கள் ஜாக் காலிஸ், ஆண்ட்ரூ பிளிண்டாஃப் ஆகியோரும் இந்த அணியில் உள்ளனர். பவுலர்கள் ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத் ஆகியோரை ஸ்டெயின் தேர்வு செய்துள்ளார்.

இந்த அணிக்கு கேப்டனாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்தை நியமித்துள்ளார் ஸ்டெயின்.

டேல் ஸ்டெயினின் கனவு டெஸ்ட் அணி:

கிரீம் ஸ்மித்(கேப்டன்), வீரேந்திர சேவாக், ஹாசிம் ஆம்லா, சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், குமார் சங்ககரா(விக்கெட் கீப்பர்), டிவில்லியர்ஸ், ஆண்ட்ரூ பிளிண்டாஃப், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத்