Asianet News TamilAsianet News Tamil

காமன்வெல்த் பாக்ஸிங்கில் 3 பதக்கங்களை உறுதி செய்த அமித் பங்கால், ஜெய்ஸ்மின், சாகர்

காமன்வெல்த் பாக்ஸிங்கில் இந்தியாவின் அமித் பங்கால், ஜெய்ஸ்மின் மற்றும் சாகர் ஆகிய மூவரும் பதக்கங்களை உறுதி செய்தனர்.
 

commonwealth games 2022 indian boxers amit panghal jaismine and sagar qualify for semi final and confirm 3 medals for india
Author
Birmingham, First Published Aug 4, 2022, 9:01 PM IST

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து பதக்கங்களை வென்றுவருகின்றனர்.

குறிப்பாக பளுதூக்குதலில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அசத்திவிட்டனர். பளுதூக்குதலில் மட்டுமே 7 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. 

இதையும் படிங்க - காமன்வெல்த் 200மீ ஓட்டப்பந்தயத்தில் அரையிறுக்கு முன்னேறினார் இந்தியாவின் ஹீமா தாஸ்

காமன்வெல்த்தில் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தமாக 18 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது இந்தியா. இந்நிலையில், மேலும் 3 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர் இந்திய பாக்ஸர்கள்.

காமன்வெல்த்தில் 7ம் நாளான இன்று, ஆடவர் 51 கிலோ எடைப்பிரிவு பாக்ஸிங்கில் இந்திய வீரர் அமித் பங்கால், காலிறுதியில் ஸ்காட்லாந்து வீரரை 5-0  என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் வெற்றி பெற்றாலே வெள்ளி பதக்கம் உறுதியாகிவிடும். தோற்றாலும் வெண்கலத்திற்கான வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க - காமன்வெல்த் பளுதூக்குதலில் லவ்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றார்

அதேபோல மகளிர் 60 எடைப்பிரிவு பாக்ஸிங் காலிறுதியில் இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின், நியூசிலாந்தின் ட்ராய் கார்டனை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். எனவே ஜெய்ஸ்மினும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

ஆடவர் 92 கிலோ எடைப்பிரிவு பாக்ஸிங்கில் இந்தியாவின் சாகர் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அவரும் 
 

Follow Us:
Download App:
  • android
  • ios