காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 200மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹீமா தாஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். 

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பர்மிங்காமில் நடந்துவருகின்றன. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் காமன்வெல்த்தில் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்துவருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பளுதூக்குதலில் 7 பதக்கங்களை குவித்தது இந்திய அணி. டேபிள் டென்னிஸ், லான் பௌல்ஸ், ஜூடோ, தடகளம் ஆகியவற்றிலும் பதக்கங்களை வென்றுவருகிறது.

இன்று நடந்த மகளிர் 200மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹீமா தாஸ் 23.45 வினாடிகளில் 200 மீட்டரை கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறினார் ஹீமா தாஸ்.

இன்று நள்ளிரவு 12.53 மணிக்கு நடக்கும் அரையிறுதியில் ஹீமா தாஸ் கலந்துகொள்கிறார். அவர் அரையிறுதியிலும் சிறப்பாக ஓடி ஃபைனலுக்கு முன்னேறி, பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.