காமன்வெல்த் பளுதூக்குதலில் ஆடவர் 109 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றார். 

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடிவருகின்றனர். பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், லான் பௌல்ஸ் ஆகிய விளையாட்டுகளில் அபாரமாக விளையாடி பதக்கங்களை பெற்றுவருகின்றனர். குறிப்பாக பளுதூக்குதலில் பதக்கங்களை குவித்துவருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பளுதூக்குதலில் மீராபாய் சானு, ஜெர்மி, அச்சிந்தா ஷூலி ஆகிய மூவரும் தங்கம் வென்றனர். சங்கேத் சர்கார், பிந்தியாராணி தேவி ஆகிய இருவரும் வெள்ளியும், குருராஜா, ஹர்ஜிந்தர் கௌர் ஆகியோர் வெண்கலமும் வென்றனர்.

இந்நிலையில், பளுதூக்குதல் ஆடவர் 109 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றுள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 162 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 192 கிலோ எடை என மொத்தமாக 355 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்றார் லவ்ப்ரீத் சிங். 

காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா தொடர்ச்சியாக பதக்கங்களை குவித்துவருகிறது.