செஸ் ஒலிம்பியாட் தொடரில் பயன்படுத்தப்படும் ஒரு செஸ் போர்டின் விலை ரூ.30 ஆயிரம் ஆகும். நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரானிக் செஸ் போர்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு வெறும் 4 மாதங்களில் மிகச்சிறப்பாக மேற்கொண்டு, சர்வதேசத்தையே மிரளவைத்துள்ளது.
186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர்கள், வீராங்கனைகள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தனர். அவர்கள் தங்குமிடம், உணவு போன்ற ஏற்பாடுகளை மிகச்சிறப்பான முறையில் செய்து அசத்தியது தமிழக அரசு.
இதையும் படிங்க - WI vs IND: அந்த பையன் எங்கே.? என்னடா டீம் செலக்ஷன் இது.? அதிரடி வீரரின் புறக்கணிப்பு.. ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு
மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமான செஸ் அரங்கத்தை அமைத்தது. வெளிநாட்டிலிருந்து வந்த வீரர், வீராங்கனைகளுக்கு அவரவர் நாட்டின் சாப்பாடே கிடைக்கும் அளவிற்கு ஒருவேளைக்கு தலா 102 உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. உபசரிப்பிற்கு பெயர்போன தமிழ்நாட்டின், உபசரிப்பை கண்டு செஸ் ஆட வந்த வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் என அனைவரும் மிரண்டுவிட்டனர்.
உலகமே வியக்குமளவிற்கு இந்த செஸ் ஒலிம்பியாடை நடத்திவிட வேண்டும் என நினைத்தது தமிழக அரசு. அதை செய்தும் காட்டியுள்ளது. அந்தவகையில், அனைத்தையுமே பிரம்மாண்டமாக செய்த தமிழக அரசு, செஸ் போர்டில் மட்டும் குறை வைத்துவிடுமா என்ன..?
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் அறிவுறுத்தலுக்கிணங்க, நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரானிக் செஸ் போர்டுகளை வாங்கியது தமிழக அரசு. ஒரு செஸ் போர்டின் விலை ரூ.30,000. மொத்தம் 740 போர்டுகள் நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எனவே செஸ் போர்டுக்கு மட்டும் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்..! பளுதூக்குதலில் சங்கேத் சர்கார் வெள்ளி வென்றார்
இந்த செஸ் போர்டுகள் உயர்தர டிஜிட்டல் வசதியானவை. இந்த செஸ் போர்டுக்கும் டைமிங் கருவிக்கும் இடையே ஒரு கேபிள் இணைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட வீரர் எந்த காயை நகர்த்துகிறார் என்பது டிஜிட்டல் முறையில் மொபைல் ஆப்-பில் காண்பிக்கும். இதனை அங்குள்ள பெரிய திரையின் மூலம் நடுவர்கள் பார்க்க முடியும். ஆன்லைனில் லைவில் பார்க்கும் ரசிகர்களும் பார்க்க முடியும்.
