IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணியை துவம்சம் செய்து மாஸ் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது சென்னை அணி.
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), ஷிவம் துபே, ட்வைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், சிசாண்டா மகளா, துஷார் தேஷ்பாண்டே.
அந்த பையன் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மாதிரி.. மிகப்பெரிய மேட்ச் வின்னர்..! இந்திய அணிக்கு பாண்டிங் அட்வைஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அர்ஷத் கான், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன்(12), சூர்யகுமார் யாதவ்(1), திலக் வர்மா(22), அர்ஷ்த் கான்(2), டிரிஸ்டான் ஸ்டப்ஸ்(5) ஆகிய அனைவருமே சொதப்பினர்.
IPL 2023: சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - மொயின் அலி
அதிரடியாக ஆடி 22 பந்தில் 31 ரன்கள் அடித்த டிம் டேவிட்டும் 17வது ஓவரில் ஆட்டமிழந்ததால் மும்பை அணியின் ஸ்கோர் குறைந்தது. 20 ஓவரில் 157 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 158 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது.
158 ரன்கள் இலக்குடன் ஆடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை தோற்கடித்தது. புள்ளி பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.