பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் புகுந்து சிறப்பான சம்பவம் செய்த இந்திய விமானப்படை வீரர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் முழுவதும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். 

இந்நிலையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் முகாம்களில் இந்திய விமானப்படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். சுமார் 1000 கிலோ வெடிகுண்டை தீவிரவாதிகள் முகாம் மீது வீசின. இதில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. தாக்குதலை வெற்றிகரமாக செய்து முடித்த இந்திய விமானிகளுக்கு பாராட்டுகள் குவிந்த வணண்ம் உள்ளன. 

 

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து இந்திய அணியின் அதிரடி வீரர் சேவாக் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் தி பாய்ஸ் ஹேவ் பிளேயிட் ரியல்லி வெல் என்று பதிவிட்டுள்ளார். அதில் உண்மையிலேயே நமது வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சேவாக் பாராட்டு தெரிவித்திருக்கிறார். முன்னதாக வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.