சர்வதேச மாஸ்டர் என்ற அந்தஸ்திலிருந்து, இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக 15 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரனேஷ் என்பவர் உயர்ந்திருக்கிறார்.

தமிழகத்தில் காரைக்குடியைச் சேர்ந்தவர் 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ். தனது 5 வயது முதல் செஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் குவித்துள்ளார். காமன்வெல்த் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பிரனேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில், 9 போட்டிகளில் 8 புள்ளிகளை பெற்றுள்ளார்.

முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் அடித்த இலங்கை!

இதன் மூலமாக சர்வதேச மாஸ்டர் என்ற அந்தஸ்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்திற்கு உயர்வு பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் 28 ஆவது செஸ் வீரர் என்ற பெருமையை பிரனேஷ் பெற்றுள்ளார். இந்தியாவின் 79ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளார். 

IND vs SL: காட்டடி அடித்து கடைசி வரை கடுமையாக போராடிய அக்ஸர் படேல்..! பரபரப்பான 2வது டி20யில் இலங்கை வெற்றி