அப்பா சிக்ஸர்கள் அடிப்பதைப் பார்த்து ரசித்த மகள் ஷிவா!
டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி சிக்ஸர்கள் அடிப்பதைக் கண்டு அவரது அன்பு மகள் ஷிவா ரசித்து பார்த்து ஆரவாரம் செய்துள்ளார்.
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 55ஆவது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது. ஷிவம் துபே மட்டுமே அதிரடியாக ஆடி 25 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். கடைசியாக வந்த தோனி சிக்ஸர்கள் அடிப்பதைக் கண்டு அவரது மகள் ஷிவா கை தட்டி ஆரவாரம் செய்துள்ளார். அவர் மட்டுமின்றி அவரது மனைவி சாக்ஷியும் உற்சாகமாக கண்டு ரசித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆஃப் வாய்ப்பில் 10 அணிகள்!
ஷிவம் துபே, தோனியின் அதிரடி சிக்ஸர்கள்: டீசண்டான ஸ்கோர் எடுத்த சிஎஸ்கே!
எளிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ரன் ஏதும் இன்றி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷூம் ரன் அவுட் முறையில் 5 ரன்களில் பரிதாபமாக அவுட்டானார். அவரை மணீஷ் பாண்டே ரன் அவுட்டாக்கிவிட்டார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது வரையில் டெல்லி கேபிடல்ஸ் 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் வரையில் எடுத்துள்ளது.
டெஸ்ட் மாதிரி விளையாடும் சிஎஸ்கே; வர்றாங்க, போறாங்க; ஒரு சிக்ஸர் கூட இல்ல!