15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆஃப் வாய்ப்பில் 10 அணிகள்!
இதுவரையில் நடந்த ஐபிஎல் சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பில் 10 அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஆனால், இன்னும் ஒரு சில போட்டிகளுக்குப் பிறகு பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மாற்றங்களுடன் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில் 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பல விதிமுறைகளுடன் இந்த ஐபிஎல் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு போட்டி போட்டு வருகின்றன. அதில், ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்காக கம்பீரமாக முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதியாகிவிடும்.
இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்று டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை நோக்கி முன்னேறும். இதுவரையில் ஒவ்வொரு அணியும் குறைந்தது 10 போட்டிகளில் வரையில் விளையாடிய நிலையில் 10 அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஒரு அணி குறைந்தது 18 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். அதாவது, ஒரு அணி 14க்கு 9 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
ஆஸ்கர் ஹீரோக்களை சந்தித்த தோனி: நம்பர் 7 ஜெர்சியை கொடுத்து கௌரவப்படுத்திய சிஎஸ்கே!
இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் குவாலிபையரில் போட்டி போடும். அடுத்த 2 இடங்களில் இருக்கும் அணிகள் எலிமினேட்டரில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையரில் தோற்ற அணியுடன் மோதி இறுதிப் போட்டிக்கு செல்லும். தற்போது புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகள் உடன் உள்ளது. 4ஆவது இடத்தில் லக்னோ அணி உள்ளது. 5, 6, 7, 8 ஆகிய இடங்களில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ் (10 புள்ளிகள்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால், ரன்ரேட்டில் வேறுபடுகின்றன.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி - கேஎல் ராகுல்!
புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் 10 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 புள்ளிகளுடனும், டெல்லி கேபிடல்ஸ் 8 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்திலும் உள்ளன. இன்று சென்னைக்கு எதிராக நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று 9ஆவது இடத்திற்கு முன்னேறும். அடுத்தடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெறும். ஆனால், மற்ற அணிகளின் புள்ளிகள் அடிப்படையில் டெல்லி கேபிடல்ஸுக்கு பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
Sweet Mango's: விராட் கோலியை வம்புக்கு இழுக்கும் நவீன் உல் ஹாக், கவுதம் காம்பீர்!
இதுவரையில் எந்த ஐபிஎல் சீசனிலும் நடக்காத ஒரு நிகழ்வு இந்த ஐபிஎல் சீசனில் நடந்துள்ளது. ஆம், ஒவ்வொரு அணியும் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணியைத் தவிர மற்ற அணிகள் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதுவரையில் ஒவ்வொரு அணிக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. இன்னும் ஒரு சில போட்டிகளுக்குப் பிறகு தான் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பு பட்டியலில் கூட இடம் பெறவில்லை. இரு அணிகளும் 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே வெளியேறிவிட்டன. கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் 5 மற்றும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பு ரேஸில் இடம் பெறாமல் வெளியேறின. இதே போன்று 2020 ஆம் ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் பட்டியலில் இடம் பெறாமல் யாருக்கும் போட்டியாக இல்லாமல் வெளியேறின.