உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி பலப்பரீட்சை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

ஐபிஎல் மற்றும் ஆசிய கோப்பையைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இதற்கான ஒவ்வொரு அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ஐசிசியின் புதிய விதிமுறையின்படி கடந்த 4 ஐசிசி உலகக் கோப்பையின் சூப்பர் லீக் மூலமாக 8 அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என்று அறிவித்திருந்தது. அதில் ஏற்கனவே இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 7 அணிகள் தகுதி பெற்றிருந்தன.

இந்த நிலையில், தற்போது 8ஆவது அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றுள்ளது. ஆனால், வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், அயர்லாந்து 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தால் உலகக் கோப்பைக்கு 8ஆவது அணியாக தகுதி பெற்றிருக்கும். ஆனால், இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு தென் ஆப்பிரிக்கா அணிக்கு சென்றுள்ளது. இதன் மூலமாக ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தென் ஆப்பிரிக்கா அணி நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆஸ்கர் ஹீரோக்களை சந்தித்த தோனி: நம்பர் 7 ஜெர்சியை கொடுத்து கௌரவப்படுத்திய சிஎஸ்கே!

Scroll to load tweet…

இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவதால், இந்திய அணி நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மீதமுள்ள 2 அணிகளுக்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி ஜிம்பாப்வேயில் தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கிறது. இதில், அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நேபாள், யு.எஸ்.ஏ., ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் அணி, ஜிம்பாப்வே ஆகிய 10 அணிகள் விளையாடுகின்றன. இதில் 2 அணிகள் மட்டும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி - கேஎல் ராகுல்!

இந்த தொடரில் இடம் பெறும் 10 அணிகளுக்கு 48 லீக் போட்டிகளும், 3 நாக் அவுட் போட்டிகளும் என்று மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு முதல் போட்டியே ஆஸ்திரேலியா உடன் என்று கூறப்படுகிறது. அதுவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இந்தப் போட்டி நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

Sweet Mango's: விராட் கோலியை வம்புக்கு இழுக்கும் நவீன் உல் ஹாக், கவுதம் காம்பீர்!

Scroll to load tweet…

அதோடு, உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிறுதிப் போட்டி மும்பையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் அகமபதாபாத், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் பாகிஸ்தான் தங்களது போட்டிகளை விளையாடுகிறது. மேலும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் முதல் போட்டியும், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. உலகக் கோப்பை தொடர் அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, இந்தூர், தர்மசாலா, கவுகாத்தி, ராஜ்கோட், ராய்பூர் மற்றும் மும்பை ஆகிய மைதானங்களில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், ஒரு நாள் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணைகள் இந்த ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…

Scroll to load tweet…