அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி - கேஎல் ராகுல்!
நான் எனது அறுவை சிகிச்சையை முடித்துவிட்டேன். அது வெற்றிகரமாக இருந்தது என்று கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது லக்னோ அணியின் கேப்டன் அணிகளுக்கு இடையிலான 43ஆவது போட்டி லக்னோவில் நடந்தது. இதில், லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். அந்தப் போட்டியில் கடைசியாக களமிறங்கினார். எனினும், அந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
Sweet Mango's: விராட் கோலியை வம்புக்கு இழுக்கும் நவீன் உல் ஹாக், கவுதம் காம்பீர்!
இதைத் தொடர்ந்து, கேஎல் ராகுல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளிலிருந்து வெளியேறினார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்தும் விலகினார். இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம், நான் எனது அறுவை சிகிச்சையை முடித்துவிட்டேன் - அது வெற்றிகரமாக இருந்தது," என்று அவர் கூறினார். நான் வசதியாக இருந்ததை உறுதி செய்த மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. நான் இப்போது குணமடையும் பாதையில் இருக்கிறேன் என்று அவர் எழுதினார். மேலும், நான் சிறந்த நிலைக்கு திரும்பவும் மீண்டும் களத்தில் இறங்கவும் உறுதியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலிக்கு முழு சம்பளம் ரூ.1.07 கோடி, கவுதம் காம்பீருக்கு முழு சம்பளம் ரூ.25 லட்சம் அபராதம்!